அ.தி.மு.க.வை அழித்து பா.ஜ.க.வை வளர்க்கிறார் இபிஎஸ்- அமைச்சர் சேகர் பாபு
- கரையான் புற்றை அரிப்பது போல எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அரித்துக் கொண்டிருக்கிறார்.
- முதலமைச்சரின் பலம் பொருந்திய கரத்தை மேலும் வலுவாக்குவதற்கு அனைவரும் வருவார்கள்.
சென்னை:
கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பல்ல அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என அஜித் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இதனிடையே, அஜித் பேட்டி குறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமைச்சர் சேகர்பாபு, நடிகர் அஜித்தின் பேட்டியை தான் இன்னும் பார்க்கவில்லை என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி தனது ராஜதந்திர நடவடிக்கைகளால் அ.தி.மு.க.வை அழித்து கொண்டிருக்கிறார். கரையான் புற்றை அரிப்பது போல எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அரித்துக் கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி தனது செயல்பாடுகளால் அ.தி.மு.க.வை அழித்து பா.ஜ.க.வை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதை உண்மையான அ.தி.மு.க.வினர் உணர்ந்து இருக்கிறார்கள்.
முதலமைச்சரின் பலம் பொருந்திய கரத்தை மேலும் வலுவாக்குவதற்கு அனைவரும் வருவார்கள் என்றார்.