தமிழ்நாடு செய்திகள்

TVKvsDMK விஜய் பா.ஜ.க.-வின் "சி" டீம்: அமித் ஷாவின் ஸ்லீப்பர் செல்- அமைச்சர் ரகுபதி

Published On 2026-03-10 16:19 IST   |   Update On 2026-03-10 16:19:00 IST
  • விஜய் கட்சி மாற்றுக்கட்சியும் அல்ல. எந்தக் கட்சியும் அல்ல.
  • அவரது கட்சி விளம்பர கட்சிதான்.

த.வெ.க. தலைமையில் 3-வது அணி உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில், அவர் (விஜய்) பாஜக பக்கம் செல்ல இருப்பதாகவும், இது தொடர்பாக பவன் கல்யாண் பேசி வருவதாகவும் செய்திகள் வருகிறதே?. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று அமைச்சர் ரகுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ரகுபதி பதில் அளித்ததாவது:-

பவன் கல்யாண் பேசினாலும், தவன் கல்யாண் பேசினாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை 3-வது அணி, 4-வது அணி வந்தாலும் நாங்கள் பலம் பொருந்திய அணியாகவும், நல்லது செய்கின்ற அணியாகவும், மக்கள் வரவேற்கும் அணியாகவும் எங்கள் அணி இருக்கிறது.

தேர்தல் அறிக்கையில் என்னென்ன முக்கியம்சங்கள் இடம் பெறும் என்பதை எங்கள் தலைவர் சொல்வார்.

விஜயை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவர் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வாங்குகிறார் என்றால், பிளாக்கில் டிக்கெட் விற்றால்தான் வாங்க முடியும்.

விஜய் கட்சி மாற்றுக்கட்சியும் அல்ல. எந்தக் கட்சியும் அல்ல. அவர் விளம்பர கட்சிதான். விஜய் கட்சி பாஜக-வின் சி டீம். முதல் நாளில் இருந்தே இதைத்தான் நான் சொல்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அவர் அமித் ஷாவின் ஸ்லீப்பர் செல்.

இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.

Tags:    

Similar News