null
Athi Varadar| 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளும் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு- நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபடும் பக்தர்கள்
- 12 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் அத்திவரதர் கடந்த 1-ந்தேதி பாதாள அறையில் இருந்து வெளியே வந்தார்.
- இதுவரை சுமார் 5 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் மிகவும் பழமையான வரதராஜ பெருமாள் கோவில், வேதநாராயண பெருமாள் கோவில்கள் அமைந்து உள்ளது.
இந்த வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும், முன்ஜென்ம பாவங்களும் நீங்கும், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் 1915-ம் ஆண்டு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன் பின்னர், 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் அத்திவரதர் கடந்த 1-ந்தேதி பாதாள அறையில் இருந்து வெளியே வந்தார்.
10 நாட்கள் மட்டுமே அத்திவரதரை தரிசனம் செய்ய முடியும் என்பதால் தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனமுருகி தரிசனம் செய்தனர். இதுவரை சுமார் 5 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிலும், இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.