தமிழ்நாடு செய்திகள்
null

Madurai Airport | மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2026-03-10 16:35 IST   |   Update On 2026-03-10 16:36:00 IST
  • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நடைபெற்றது.
  • முக்கியமான மிகப்பெரிய அளவிலான 6 திட்டங்களுக்கு இதில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விமான நிலைய ஓடுபாதை நீட்டிக்கப்படும். புதிய முனையம் அமைக்கப்படும்.

இன்று 6 மிகப்பெரிய திட்டம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இது 8.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கான ஆலோசனை. இதில் ஜல் ஜீவன் திட்டம் 2.0, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துதல், மேற்கு வங்கத்தில் சந்திராகாச்சி- கராக்பூர் 4-வது ரெயில்வே பாதை, சைந்தியா- பாகுர் 3-வது பாதை, மத்திய பிரதேசத்தில் பத்னாவார் தண்ட்லா- திமார்வானி 4 வழி நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Tags:    

Similar News