தமிழ்நாடு செய்திகள்

Karur Stampede Case| வருகிற 15-ந்தேதி சிபிஐ முன்பு ஆஜராகிறார் விஜய்- நிர்மல் குமார் தகவல்

Published On 2026-03-10 15:50 IST   |   Update On 2026-03-10 15:50:00 IST
  • பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
  • பா.ஜ.க.வுடன் மறைமுக பேச்சுவார்த்தை இல்லை.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக த.வெ.க தலைவர் விஜய் ஏற்கனவே 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதனை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகும் படி நேற்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதனை தொடர்ந்து தேர்தல் பணிகள் காரணமாக விசாரணையில் இருந்து விலக்கு அளித்து சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என சிபிஐ-க்கு விஜய் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில், கரூர் வழக்கு விசாரணைக்காக வருகிற 15-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. அன்றைய தினம் சி.பி.ஐ. விசாரணைக்கு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜராக உள்ளார் என்று த.வெ.க. இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. பா.ஜ.க.வுடன் மறைமுக பேச்சுவார்த்தை இல்லை. யூகங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்றார். 

Tags:    

Similar News