#KarurStampedeCase தேர்தல் நேரத்தில் சிபிஐ கெடுபிடி: விசாரணையில் இருந்து விலக்கு கேட்கும் விஜய்..!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து சிபிஐயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
#KarurStampedeCase தேர்தல் நேரத்தில் சிபிஐ கெடுபிடி: விசாரணையில் இருந்து விலக்கு கேட்கும் விஜய்..!
Published on

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி உள்ளனர்.

தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை ஆஜராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நாளை நடைபெறும் சிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து சிபிஐயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகள் காரணமாக விசாரணையில் இருந்து விலக்கு அளித்து சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com