தமிழ்நாடு செய்திகள்

SSLC| பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்- விஜய்

Published On 2026-03-11 08:17 IST   |   Update On 2026-03-11 08:17:00 IST
  • இன்று தொடங்கும் பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது.
  • உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைக்க வாழ்த்துகள்!

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேர் என மொத்தம் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.

உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைக்க வாழ்த்துகள்!

நல்லதே நடக்கும்!

வெற்றி நிச்சயம்! என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News