தமிழ்நாடு செய்திகள்

'நான் மோடிக்கு விசுவாசமான நாய்' - தவெக அருண்ராஜ் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி!

Published On 2025-12-17 21:48 IST   |   Update On 2025-12-17 21:48:00 IST
  • பேசவேமாட்டேன் என்றால் அது என்ன அரசியல்?
  • கட்சியில் சேர்ந்ததிற்காக சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்கிறவன் கிடையாது

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் வாய் திறக்காதது குறித்து பேசியிருந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை,

"கம்முனு இருக்கவேண்டிய இடத்தில் கம்முனு இருக்கணும். கும்முனு இருக்கவேண்டிய இடத்தில் கும்முனு இருக்கணும். இது விஜய் கூறியது. அரசியலில் அப்படி இருக்க முடியுமா? எப்படி இருந்தாலும் பேசவேண்டிய இடத்தில் பேசினால் நல்ல அரசியல்வாதியாக வருவார். இவ்வளவு பிரச்சனைகள் நடக்கும்போது நான் வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால், உங்களை(விஜய்யை) நம்பி எப்படி மக்கள் ஆட்சிப் பொறுப்பை கொடுப்பார்கள்? தவறு என்றால் தவறு எனக்கூறவேண்டும். சரி என்றால் சரி எனக்கூறவேண்டும். பேசவேமாட்டேன் என்றால் அது என்ன அரசியல்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த தவெக நிர்வாகி அருண்ராஜ், "அவர் கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால் அவர் இருந்திருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்து இருப்பார்" என்று கூறினார். 

இந்நிலையில் அருண்ராஜ் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, "இந்த அண்ணாமலை என்கின்ற நாயின் வாலை நிமிர்த்தமுடியாது. இந்த வால் அப்படித்தான் இருக்கும். ஏனெனில் இது உண்மையை பேசுகின்ற நாய். இது ஜால்ரா அடிக்கும் நாய் கிடையாது. கட்சியில் சேர்ந்ததிற்காக சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்கிற நாய் இல்லை. இந்த நாயின் வால் வளைந்துதான் இருக்கும். இந்த நாய் அப்படித்தான் பேசும். அதற்காக எது வந்தாலும் அது ஏற்றுக்கொள்ளும். மோடியின் நன்றியுள்ள நாய் இது.

சினிமா நடிகர்களுக்கு ஜால்ரா அடிப்பதற்காக நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரவில்லை. நான் ஒரு உன்னதமாக கோட்பாட்டிற்காக வந்துள்ளேன். இந்த வால் இப்படித்தான், நெலிந்து வளைந்துதான் இருக்கும். வருகின்ற காலத்திலும் பல பிரச்சனைகளை சந்திக்கத்தான் போகிறேன். ஆனால் மக்களுக்காகத்தான் அதனை சந்திக்கிறேன். அதனை பெருமையாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்கவேண்டும் என்றால் அந்தப் பதவி எனக்கு தேவையில்லை. அது என் மயிறிழைக்கு சமம்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News