தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட் கருப்பு- சிவப்புதான்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

Published On 2026-02-14 22:00 IST   |   Update On 2026-02-14 22:00:00 IST
  • 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான்! ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சிதான்! திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்!
  • ஆயிரமாண்டுகள் நின்று பேசும் சாதனைகளை, ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறோம்.

திருப்பத்தூரில் நடைபெற்ற 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் கலந்துகொண்டு திமுக தலைவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

* இந்தியா முழுவதும் எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட், Black and Red-தான் – கருப்பு-சிவப்புதான்!

* 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான்! ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சிதான்! திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்!

* ஆயிரமாண்டுகள் நின்று பேசும் சாதனைகளை, ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறோம்

* நம்முடைய திராவிட மாடல் அரசு, சாதனைகளின் அரசாக இருப்பதுதான், பழனிசாமி அவர்கள் இவ்வளவு வேதனையுடன் புலம்புவதற்குக் காரணம்.

* தமிழ்நாட்டிற்கு பரப்புரைக்கு வரும் பிரதமர், தமிழ்நாட்டிற்கு என்று இந்தச் சாதனைகளை எல்லாம் செய்திருக்கிறோம் என்று சொல்கிறாரா? இருந்தால்தானே சொல்ல முடியும்!

* நம்முடைய இலக்கு எவ்வளவு? 200 தொகுதிகள்! 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன தேவை? ஓய்வில்லாத உழைப்பு!

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News