தமிழ்நாடு செய்திகள்

விஜய் - திரிஷா குறித்த நயினார் நாகேந்திரனின் அநாகரீக பேச்சு - கனிமொழி கண்டனம்

Published On 2026-02-14 20:47 IST   |   Update On 2026-02-14 20:47:00 IST
  • நயினார் நாகேந்திரனின் விஜய் குறித்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது
  • அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல்.

சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் பேச்சை கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல். தமிழ்நாடு பாஜக தலைவரின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News