விஜய் - திரிஷா குறித்து அநாகரீக பேச்சு: நயினார் பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர்- தமிழிசை
- நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
- நயினாரின் பேச்சு வருத்தமாகத்தான் இருக்கிறது என்று வானதி சீனிவாசனம் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இத்தனிடையே, இதுகுறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், "நயினாரின் பேச்சு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. ரொம்ப பண்பாகப் பேசக் கூடியவர்.. எதற்காக அப்படி பேசினார் எனத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை, "நயினார் நாகேந்திரன் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். அவர் எந்த உள்நோக்கத்திலும் பேசியதாக தெரியவில்லை. அவர் யாரையும் புண்படுத்த வேண்டும் என்றோ உள்நோக்கத்திடனோ பெண்களை இழிவுபடுத்தா வேண்டும் என்ற எண்ணம் உடையவர் அல்ல. . அவரை விமர்சிக்க திமுக, காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு தகுதி இல்லை"