தமிழ்நாடு செய்திகள்

சென்னை பெரம்பூரில் லாரி மோதி சிறுமி உயிரிழப்பு - போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட்

Published On 2025-06-19 06:57 IST   |   Update On 2025-06-19 06:57:00 IST
  • லாரி மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
  • தன் கண் முன்னே மகளை பறிகொடுத்த தாய் கதறி அழுதார்.

சென்னை பெரம்பூர் பகுதியில் நேற்று காலை தண்ணீர் லாரி மோதி, ஸ்கூட்டியில் தாயுடன் சென்ற சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து நெரிசல் நேரத்தில் லாரி சென்றதை தடுக்கத் தவறிய போக்குவரத்து ஆய்வாளர் சுடலை மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், போக்குவரத்துக் காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News