தமிழ்நாடு செய்திகள்

கோப்புப்படம்

பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2026-01-31 12:42 IST   |   Update On 2026-01-31 12:42:00 IST
  • இந்திய நாட்டிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • வர்த்தக ஒப்பந்தம் தங்களுக்கு எத்தகைய நன்மைகளை பயக்கவுள்ளது என்பதை பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் பிரதிநிதிகள் விளக்கினர்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சமீபத்தில் நம் இந்திய நாட்டிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் பிரதிநிதிகள் என்னைத் தொடர்பு கொண்டு, இந்த வர்த்தக ஒப்பந்தம் தங்களுக்கு எத்தகைய நன்மைகளை பயக்கவுள்ளது என்பதை விளக்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, தொடர்ந்து இதுபோன்ற நல்ல திட்டங்களை மத்திய அரசு சார்பிலும், விரைவில் தமிழ்நாட்டில் அமையவுள்ள அ.தி.மு.க. அரசு சார்பிலும் அளித்திட தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இத்தருணத்தில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த வர்த்தக ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



Tags:    

Similar News