தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி குறித்து விரைவில் முடிவு - ராமதாஸ்

Published On 2026-01-31 12:58 IST   |   Update On 2026-01-31 12:58:00 IST
  • நேர்காணல் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
  • நாளை மற்றும் நாளை மறுநாள் மீதி உள்ள மாவட்டங்களுக்கு நேர்காணலை ராமதாஸ் நடத்துகிறார்.

திண்டிவனம்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பா.ம.க. சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவை பெற்றார். இதையடுத்து அதற்கான நேர்காணல் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான முதற்கட்டமான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. நாளை மற்றும் நாளை மறுநாள் மீதி உள்ள மாவட்டங்களுக்கு நேர்காணலை ராமதாஸ் நடத்துகிறார்.

இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் முடிவு எடுக்கவில்லை. விரைவில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். நம்பிக்கையின் அடிப்படையில் தான் உலகம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News