பா.ஜ.க.வினருக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது - மு.க.ஸ்டாலின்
- ஆளுநரும் பிரதமரும் பொருளாதார ஆய்வு அறிக்கையை படிக்க வேண்டும்.
- கிராமப்புறங்களில் முதுகெலும்பாக அமைந்திருந்தது 100 நாள் வேலை திட்டம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து காரைக்குடி கழனிவாசலில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.2.559.50 கோடி மதிப்புள்ள 49 முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.13.36 கோடி மதிப்புள்ள 28 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் கூறியதாவது:
* திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.
* தமிழகத்தை விமர்சிக்கக்கூடிய ஆளுநர் கேள்விகளை மத்திய அரசிடம் தான் கேட்க வேண்டும்.
* மத்திய அரசின் பொருளாதார அறிக்கையில் தமிழக அரசை பாராட்டி உள்ளனர்.
* உற்பத்தி துறை, வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம் என பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* ஆளுநரும் பிரதமரும் பொருளாதார ஆய்வு அறிக்கையை படிக்க வேண்டும்.
* ஜனாதிபதி உரை என்றால் அது பா.ஜ.க. அரசின் உரை தான்.
* கிராமப்புறங்களில் முதுகெலும்பாக அமைந்திருந்தது 100 நாள் வேலை திட்டம்.
* பா.ஜ.க.வினருக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது.
* 100 நாள் வேலை திட்டத்தில் 50 நாட்கள் கூட மத்திய அரசு வேலை கொடுக்கவில்லை.
* 100 நாள் வேலை திட்டத்தில் 150 நாட்கள் வேலை அளிப்போம் என மத்திய அரசு கூறுவது மாயை.
* மத்திய அரசு தனது கடமையில் இருந்து நழுவி ஓடுகிறது.
* மக்களின் குரலுக்கு மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயம் செவி சாய்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.