தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்க முடியாதவர் பத்து தோல்வி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

Published On 2026-01-31 12:38 IST   |   Update On 2026-01-31 12:38:00 IST
  • 2011, 2016-ல் அ.தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியதா?
  • அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து காரைக்குடி கழனிவாசலில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.2.559.50 கோடி மதிப்புள்ள 49 முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.13.36 கோடி மதிப்புள்ள 28 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் கூறியதாவது:

* தி.மு.க. அரசின் திட்டங்களை காப்பியடித்து வாக்குறுதிகள் என அள்ளி வீசுகிறார் இ.பி.எஸ்.

* 2011, 2016-ல் அ.தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியதா?

* சென்னை- கன்னியாகுமரி இடையே கடலோர சாலை என அ.தி.மு.க. அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதா?

* அ.தி.மு.க. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற போவதில்லை என்பது மக்களுக்கு தெரியும்.

* தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்க முடியாதவர் பத்து தோல்வி பழனிசாமி.

* வாக்குறுதி அளித்தபடியே மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கி வருகிறோம்.

* அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.

* 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 58 விழுக்காடாக உயர்த்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News