தமிழ்நாடு செய்திகள்
பச்சை துரோகி பழனிசாமி! - பத்து தோல்வி பழனிசாமி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
- தமிழக விவசாயிகளுக்காக பிரதமரை சந்திக்காதது ஏன்?
- எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல...
ஈரோடு:
ஈரோட்டில் அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி தமிழக விவசாயிகளுக்காக பிரதமரை சந்திக்காதது ஏன்?
* கார் மாறி மாறிச்சென்று பிரதமரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி தமிழக விவசாயிகளுக்காக பிரதமரிடம் கோரிக்கை வைக்காதது ஏன்?
* எடப்பாடி பழனிசாமி மேற்கு மண்டலத்திற்கு செய்த பச்சை துரோகங்களில் Latest Addition கோவை மெட்ரோ ரெயில் திட்டம் ரத்தானது.
* எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, உழவர்களுக்கு துரோகம் செய்யும் துரோகி.
* முதுகெலும்பை இழந்து கர்ச்சீப்பை முகத்தில்வைத்து சுற்றுவதால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு பத்து தோல்வி பழனிசாமி பெயரை கொடுத்துள்ளது என்றார்.