தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. எஜமான விசுவாசத்தை காண்பித்துள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published On 2025-04-10 13:49 IST   |   Update On 2025-04-10 13:49:00 IST
  • ஆளுநர்களின் அதிகார அத்துமீறலுக்கு எதிரான வழக்குகள் என்பவை உச்சநீதிமன்றத்திற்குப் புதியதன்று.
  • நீதிக் கட்சியில் தொடங்கி அதன் நீட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் வரை உரிமைப் போராட்டம் ஓயவில்லை.

சென்னை, ஏப்.10-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற பெயரில் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்ப தாவது:-

சட்டப் போராட்டத்தின் வழியே திராவிட முன் னேற்றக் கழகமும் அதன் தலைமையிலான அரசும் பெற்றுத் தருகின்ற தீர்ப்பு கள் தமிழ்நாட்டின் நலனுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனநாய கத்திற்கும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவையாக இருக்கும் என்பதுதான் வரலாறு. ஆளுநரின் அதி கார அத்துமீறல்களை ரத்து செய்து, மாநில உரிமைக ளைக் காத்திடும் மகத்தான தீர்ப்பினை, திராவிட மாடல் அரசு முன்னெடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது வர லாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய 'ரெட் லெட்டர் டே' ஆகும்.

பேரறிஞர் அண்ணாவும் உயிர்நிகர் தலைவர் கலைஞரும் கட்டிக்காத்த மாநில உரிமைகளுக்கு ஆபத்து நேரும்போது, தி.மு.க.வின் தலைவர் என்ற பொறுப்பிலும் தமிழ்நாட் டின் முதலமைச்சர் என்ற பொறுப்பிலும் உள்ள உங்களில் ஒருவனான நான் மாநில உரிமை காக்கும் சட்டப்போரில் சளைக்கா மல் முதன்மையாக நிற் பேன்.

உரிமைக்கான குரலாகத் தொடங்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். நீதிக் கட்சியில் தொடங்கி அதன் நீட்சியான திராவிட முன் னேற்றக் கழகம் வரை உரிமைப் போராட்டம் ஓயவில்லை. போராட்டம் ஒரு புறம், ஆட்சி நிர்வாகம் மறுபுறம் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணியும் பயணமும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

ஆளுநர்களின் அதிகார அத்துமீறலுக்கு எதிரான வழக்குகள் என்பவை உச்சநீதிமன்றத்திற்குப் புதிய தன்று. ஒன்றிய பா.ஜ.க அரசு தன்னால் வெற்றிபெற முடியாத மாநிலங்களில், மாற்றுக் கட்சி அரசுகளின் செயல்பாடுகளைத் தடுப் பதற்காகவே ஆளுநர்களை நியமித்து, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு சட்ட விரோத மானது என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு தனது சட்ட மன்றத்தில் நிறைவேற்று கின்ற தீர்மானத்திற்கு ஒப்பு தல் அளிக்க வேண்டியது நியமனப் பதவியில் உள்ள ஆளுநரின் வேலை என்ப தையும் உச்சநீதிமன்ற நீதிபதி கள் பர்திவாலா, மகாதேவன் அமர்வின் தீர்ப்பு தெளி வாகத் தெரிவித்தது. சட்ட மன்றம்தான் வலிமை யானது, ராஜ்பவனுக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பாராட்டி அறி விப்பை வெளியிட்டேன்.

கழகம் எப்போதும் சொல்லி வருவது போல, ஆளுநர் பதவி என்பது ஒன்றிய-மாநில அரசுக்கு இடையிலான தபால்காரர் பணிதான் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்புரைத்திருக்கிறது.

தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களில் ஆளுநரின் அத்துமீறல்களைத் தகர்த்தெ றிந்த வெற்றித் தீர்ப்பு வெளியான வேகத்தில், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போ ராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வ தற்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 9-ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சமூகநீதிக்கும் மாணவர்களுக்கும்-மக்களுக்கும் எதிரான பா.ஜ.க.வினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்றதும், அவர்க ளின் வழியில் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினரும் புறக்கணித்து தங்கள் எஜமான விசுவா சத்தை வெளிப்படுத்தினர்.

ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளி வாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும். மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி என்று நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் மொழிந்த முழக்கத்தை முன்வைத்து நீதியின் வாயிலாக இந்தி யாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக தி.மு.க தன் போராட்டத்தைத் தொடரும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News