அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
- இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர், மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இனிப்பு வழங்கினார்.
- இன்று முதல் மாணவர் சேர்க்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருந்தது.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர், மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இனிப்பு வழங்கினார்.
மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளுக்கு தக்க பலன் கிடைத்தும் உள்ளது.
அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே தொடங்கி இருந்தாலும், இன்று முதல் மாணவர் சேர்க்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருந்தது.