10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் ஆகும். வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை 4 முதல் துணைத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விரும்புவோர் மே 22 முதல் ஜூன் 6-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு அட்டவணை இன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரும் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பிக்கலாம்.