தமிழ்நாடு செய்திகள்

டி.டி.வி.-யை ஓரிரு நாட்களில் சந்திப்பேன்: அண்ணாமலை

Published On 2025-09-18 14:36 IST   |   Update On 2025-09-18 14:36:00 IST
  • ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க.வை காப்பாற்றியது பா.ஜ.க.தான் என எடப்பாடி பழனிசாமி கூறியது சரித்திர உண்மை.
  • பா.ஜ.க. கஷ்டத்தில் இருந்தபோது டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக இருந்தார்கள்.

பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* அமித் ஷா கூறியபடி எடப்பாடி பழனிசாமி தான் கூட்டணி தலைவர். அவரை முதலமைச்சராக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

* அமித் ஷாவை பார்த்துவிட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முகத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை. என்னை பொருத்தவரை அவர் முகத்தை மறைத்ததாக தெரியவில்லை.

* ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க.வை காப்பாற்றியது பா.ஜ.க.தான் என எடப்பாடி பழனிசாமி கூறியது சரித்திர உண்மை.

* விஜய் சுற்றுப்பயணத்திற்கு கூட்டம் கூடினால் சந்தோஷம் தான், ஆனால் தொண்டர்கள் பொதுச்சொத்தை சேதப்படுத்த கூடாது.

* டி.டி.வி. தினகரனை ஓரிரு நாட்களில் நட்பின் அடிப்படையில் சந்திக்க இருக்கிறேன்.

* பா.ஜ.க. கஷ்டத்தில் இருந்தபோது டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக இருந்தார்கள். அவர்களோடு அரசியலைத்தாண்டி என் நட்பு தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News