தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. போல் இரட்டை வேடம் போடும் கட்சி அ.தி.மு.க. கிடையாது- எடப்பாடி பழனிசாமி

Published On 2025-07-16 18:16 IST   |   Update On 2025-07-16 18:16:00 IST
  • திமுகவினர் கூட்டணி வைத்தால் நல்லது, அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா?
  • பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணி வைத்த திமுகவிற்கு பேசுவதற்கு தகுதியுள்ளதா?

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் சிதரம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

வாஜ்பாயுடன் கலைஞர் இருந்த புகைப்படத்தை காண்பித்து மக்களிடையே எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆட்சி அதிகாரம் வேண்டுமெனில் திமுகவினர் யார் காலில் வேண்டுமானாலும் விழுவர்.

திமுகவினர் கூட்டணி வைத்தால் நல்லது, அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா?

பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணி வைத்த திமுகவிற்கு பேசுவதற்கு தகுதியுள்ளதா?

பயம் என்ற சொல்லே அதிமுகவுக்கு இல்லை. அதிமுக தொண்டனையும் யாராலும் பயமுறுத்த முடியாது.

சட்டமன்றத்திலேயே பெண் என்றும் பாராமல் நமது அம்மாவை தாக்கிய திமுக தற்போது நமக்கு சவால் விடுகின்றன.

ஜெயலலிதாவை கொலை செய்வதற்கு எத்தனையே முயற்சிகள் நடைபெற்றன. எந்த கொம்பனும் அதிமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை மு.க.ஸ்டாலின் உடைக்க பார்த்தார்.

பாஜகவை பார்த்து ஸ்டாலின் தான் பயப்படுகிறார். பிரதமர் மோடிக்கு வெள்ளை குடை பிடித்து வேந்தராகிறார் ஸ்டாலின்.

இந்த நாட்டையே ஆளும் உள்துறை அமைச்சரை சந்திப்பதில் என்ன தவறு உதயநிதிக்கு.

கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் மோடியை அழைத்தனர், வரவேற்பு, ரோடு ஷோ நடத்தினார்.

திமுக போல் இரட்டை வேடம் போடும் கட்சி அதிமுக கிடையாது.

கூட்டணி வைத்துவிட்டார்களே, ஆட்சி பறிபோய்வுடுமே என்ற அச்சத்தில் உள்ளார் மு.க.ஸ்டாலின்.

நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், உங்களுக்கு ஏன் பயம்?

இது எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.

சட்டமன்றத்திலேயே கூட்டணி குறித்து என்னிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு பயப்படுகிறார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News