தமிழ்நாடு செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

Published On 2024-03-01 09:29 IST   |   Update On 2024-03-01 09:29:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம் மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை:

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள், பொது மக்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம் மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News