தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்: தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்

Published On 2024-03-11 08:30 IST   |   Update On 2024-03-11 08:30:00 IST
  • அதிமுகவை தவிர்த்து தற்போது பாஜகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக மேற்கொண்டு வருகிறது.
  • சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதாவை பாஜக மேலிட பொறுப்பாளர்கள் இன்று சந்திக்கின்றனர்.

சென்னை:

பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு தேமுதிகவுக்கு அழைப்பு இல்லை.

இந்நிலையில் அதிமுகவை தவிர்த்து தற்போது பாஜகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

பாஜகவுடன் இன்று அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தையை தேமுதிக தொடங்கி உள்ளது. சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதாவை பாஜக மேலிட பொறுப்பாளர்கள் இன்று சந்திக்கின்றனர்.

தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News