தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது- திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன்

Published On 2024-03-18 10:06 GMT   |   Update On 2024-03-18 10:06 GMT
  • கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

இதைதொடர்ந்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

முதலமைச்சரின் பரிந்துரைப்படி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவை உடனடியாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

இதுகுறித்து திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சர் பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது.

ஆளுநர் தனியாக ஒரு அரசை நடத்த முயற்சி செய்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News