தமிழ்நாடு செய்திகள்

மீஞ்சூர், பொன்னேரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-24 16:03 IST   |   Update On 2023-03-24 16:03:00 IST
  • பாஜக அரசை கண்டித்து பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மத்திய அரசை கண்டித்தும் பாஜக கட்சியை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பொன்னேரி:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை விமர்சித்து பேசியதற்காக வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக பாஜக அரசை கண்டித்து பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் பாஜக கட்சியை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதேபோன்று மீஞ்சூர் பேரூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பேரூர் தலைவர் மற்றும் 9வது வார்டு கவுன்சிலர் துரைவேல் பாண்டியன் தலைமையில் 15 வது வார்டு கவுன்சிலர் பரிமளா அருண்குமார் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News