செய்திகள்
உறங்கும் போதும், நடக்கும் போதும் ஸ்டாலின் முதலமைச்சர் கனவு காண்கிறார் - ராமதாஸ்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறங்கும் போதும், நடக்கும் போதும் முதலமைச்சர் கனவு காண்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். #LokSabhaElections2019 #MKStalin #Ramadoss
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி, சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறங்கும் போதும், நடக்கும் போதும் ஸ்டாலின் முதலமைச்சர் கனவு காண்கிறார். என்னையும் முதல்வரையும் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்.
அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுகவை முடித்து வைக்கப்போவது, அக்கட்சியின் இப்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் தான். ஏனென்றால் அவரது செயல்பாடுகள், பேச்சுக்கள் அந்த அளவிற்கு மகா மட்டமாக இருக்கின்றன. என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது? என்பதே அவருக்கு தெரியவில்லை. தைலாபுரம் தோட்டத்தில் நாங்கள் அரசியல் பயிலரங்கம் நடத்துகிறோம். அவர் விரும்பினால் அங்கு வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #MKStalin #Ramadoss