செய்திகள்

பாஜகவின் வளர்ச்சிக்கு துணை போக மாட்டோம் - தம்பிதுரை

Published On 2019-02-27 11:51 IST   |   Update On 2019-02-27 11:51:00 IST
அதிமுக-பாஜக கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே, பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு நாங்கள் துணை போகமாட்டோம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #ThambiDurai #BJP
கரூர்:

கரூர் ஏமூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

பயங்கரவாதிகளை ஒழித்து கட்டிய இந்திய ராணுவ வீரர்களின் செயல் பாராட்டுக்குரியது. நாட்டின் மரியாதையை காக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதனை நாட்டில் உள்ள அனைவரும் பாராட்டுகின்றனர்.

தீவிரவாதிகளும், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக போர் செய்ய முனைந்தால் அதனை எதிர்கொள்ளும் வலிமை இந்திய ராணுவத்திற்கு இருக்கிறது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை எதிர்கொள்ள பா.ஜ.க. எங்களுக்கு துணை நிற்கிறது. இது தேர்தலுக்கான கூட்டணி. கொள்கைக்கான கூட்டணி அல்ல.



கூட்டணிக்காக பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு நாங்கள் துணை போகமாட்டோம். மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிட்டால் அதனை கடுமையாக எதிர்ப்போம். அந்த கொள்கையில் பின் வாங்கப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #BJP
Tags:    

Similar News