இந்தியா

குடியரசு தின அணிவகுப்பில் முதல்முறையாக பங்கேற்கும் ராணுவத்தின் கால்நடை பிரிவு!

Published On 2025-12-31 18:16 IST   |   Update On 2025-12-31 18:16:00 IST
  • அணிவகுப்பில் இரண்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், பத்து இந்திய இன ராணுவ நாய்கள் கலந்துகொள்ளும்
  • மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெறும்.

மத்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் சுதந்திர குடியரசு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, மத்திய ஆயுதப் படைகள், மாநில படைகள், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் உள்ளிட்ட அணிவகுப்புகள் நடைபெறும். 

இந்த நிலையில், வருகின்ற ஜன. 26 ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் மறுசீரமைப்பு மற்றும் கால்நடைப் படைப் பிரிவைச் சேர்ந்த குதிரைகள், ஒட்டகங்கள், பறவைகள், மோப்ப நாய்கள் கலந்துகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அணிவகுப்பில் இரண்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், பத்து இந்திய இன ராணுவ நாய்கள், அத்துடன் ஏற்கனவே சேவையில் உள்ள ஆறு வழக்கமான ராணுவ நாய்களும் இடம்பெறும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

தற்போது தில்லி செங்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரும் குடியரசு நாள் ஒத்திகை நிகழ்வில் இந்த விலங்குகளும், பறவைகளும் கலந்துகொண்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

Tags:    

Similar News