செய்திகள்

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதில் அரசு சட்டப்படி நடவடிக்கை- தம்பிதுரை

Published On 2018-10-10 05:18 GMT   |   Update On 2018-10-10 05:18 GMT
நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். #ThambiDurai #NakkeeranGopal
வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குறைகளை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் தேவை ஏற்பட்டால் கூட்டணி அமைப்போம். அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும், அமைச்சர் விஜயபாஸ்கரும் வாக்கிங் சென்றபோது பேசிக்கொண்டது பற்றி எனக்கு தெரியாது. இதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து அரசு சார்ந்த வி‌ஷயங்களை மட்டுமே பேசினார். அரசியல் சார்ந்த வி‌ஷயங்களை பேசவில்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதி உடனடியாக தர வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார். அதனால்தான் முதல்வருடன் நான் செல்லவில்லை. இப்பிரச்சனையில் அரசியல் வேண்டாம்.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது. பத்திரிகையாளர்கள் மீது காழ்ப்புணர்ச்சி எதுவும் அரசுக்கு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #NakkeeranGopal
Tags:    

Similar News