இனி ஜெர்மனி வழியே பயணிக்க இந்திய பயணிகளுக்கு விசா தேவை இல்லை - வெளியானது அறிவிப்பு
- ஏர்போர்ட் டிரான்சிட் விசா தேவையில்லை.
- அமெரிக்கா, கனடா, லண்டன் போன்ற நாடுகளுக்கு ஜெர்மனி வழியாகச் செல்லும் இந்தியர்களுக்கு இது பெரும் நிம்மதி.
ஜெர்மனி நாட்டின் அதிபர் பிரட்ரிக் மெர்ஸ் 2 நாள் பயணமாக இன்று காலை இந்தியா வந்தார். குஜராத் வந்திறங்கிய அவர் அங்கு பிரதமர் மோடியை சந்திந்தார். இதன் பின் இருவரும் சபர்மதி ஆசிரமம் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஒரு நாட்டு பிரதிநிதிகள் மற்றும் மோடி, பிரட்ரிக் பங்கேற்ற உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்கள் ஜெர்மனி அரசு விசா இல்லாத போக்குவரத்து வசதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஜெர்மனி வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பயணிகள் இனி தனியாக ஜெர்மன் விசா எடுக்க வேண்டிய அவசியமில்லை.
ஜெர்மனியில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் வழியாக மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, இனி ஏர்போர்ட் டிரான்சிட் விசா தேவையில்லை.
குறிப்பாக அமெரிக்கா, கனடா அல்லது லண்டன் போன்ற நாடுகளுக்கு ஜெர்மனி வழியாகச் செல்லும் இந்தியர்களுக்கு இது பெரும் நிம்மதி அளிக்கும்.