கிரிக்கெட் (Cricket)
டெஸ்ட் வரலாற்றில் அதிக சதம்: இங்கிலாந்து தொடரில் அசத்திய இந்திய பேட்ஸ்மேன்கள்..!
- சுப்மன் கில் 4 சதங்கள் அடித்துள்ளார்.
- கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் 12 சதங்கள் விளாசியுள்ளனர். அத்துடன் ஒரே தொடரில் அதிக சதங்கள் அடித்த தொடராக இந்த இங்கிலாந்து தொடர் அமைந்துள்ளது.
சுப்மன் கில் 4 சதங்கள் அடித்துள்ளார். கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர். ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.