லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் விளையாடுவதே எனது முக்கிய இலக்கு- ஸ்டீவ் ஸ்மித்
- 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆஸ்திரேலியா அணியின் சிறந்த பேட்டர் ஸ்டீவ் ஸ்மித். அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஒலிம்பிக் வாய்ப்புக்காக டி20 (T20) வடிவத்தில் தொடர்ந்து விளையாட அவர் திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில் டி20 லீக் போட்டிகளில் (BBL, MLC) விளையாடுவதன் மூலம் தனது பார்மைத் தக்கவைத்துக் கொள்ள அவர் முயற்சித்து வருகிறார்.
தற்போது பிக்பாஷ் லீக் போன்ற தொடர்களில் அபாரமாக விளையாடி வருவதன் மூலம் தனது ஒலிம்பிக் கனவை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
அந்த வகையில் 128 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணிக்காகப் பங்கேற்பதை ஸ்மித் ஒரு கௌரவமாகக் கருதுகிறார்.
இந்நிலையில் 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதே தனது முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.