வெறும் 9 ரன்களில் புதிய சாதனையை தவறவிட்ட டேரில் மிட்செல்
- இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலும் டேரில் மிட்செல் சதம் அடித்து அசத்தினார்.
- இந்த ஒருநாள் தொடரில் டேரில் மிட்செல் 352 ரன்கள் குவித்தார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2 - 1என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் டேரெல் மிட்சல் 9 ரன்களில் முதலிடத்தை தவற விட்டுள்ளார். இந்த தொடரில் அவர் 352 ரன்கள் குவித்து 3 ஆம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில பாபர் - 360 ரன்கள் (WI) மற்றும் கில் 360 ரன்கள் (NZ) ஆகியோர் உள்ளனர்.