கிரிக்கெட் (Cricket)

3வது ஒருநாள் போட்டி: மிட்செல், பிலிப்ஸ் சதம் - இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

Published On 2026-01-18 17:36 IST   |   Update On 2026-01-18 17:36:00 IST
  • நியூசிலாந்து எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
  • சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் சதம் அடித்து அசத்தினார்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹென்ரி நிக்கோல்ஸ் கோல்டன் டக் அவுட் ஆனார். கான்வே 5 ரன்னில் அவுட்டானார். வில் யங் 30 ரன்னில் அவுட்டாக ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர்.

சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். 106 ரன்னில் பிலிப்ஸ் அவுட்டாக மிட்செல் 137ரன்னிலும் அவுட்டானார்.

அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் அடித்தது

Tags:    

Similar News