கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

Published On 2026-01-18 13:04 IST   |   Update On 2026-01-18 13:04:00 IST
  • முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது
  • 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.


Tags:    

Similar News