கிரிக்கெட் (Cricket)

பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பையை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது உ.பி. வாரியர்ஸ்

Published On 2026-01-17 19:07 IST   |   Update On 2026-01-17 19:07:00 IST
  • உ.பி. வாரியர்ஸ் அணி கேப்டன் மெக் லேனிங் 70 ரன்கள் விளாசினார்.
  • லிட்ச்பீல்டு 37 பந்தில் 61 ரன்கள் சேர்த்தார்.

பெண்களுக்கான பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையான கேப்டன் மெக் லேனிங் 45 பந்தில் 70 ரன்கள் விளாசினார். லிட்ச்பீல்டு 37 பந்தில் 61 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது. மும்பை வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

6-வது வீரராக களம் இறங்கிய அமெலியா கெர், அதன்பின் வந்த அமான்ஜோத் கவுர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். என்றாலும் கவுர் 24 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கெர் ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 49 ரன்கள் எடுத்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணியால் 165 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

இதனால் உ.பி. வாரியர்ஸ் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 70 ரன்கள் விளாசிய மெக் லேனிங் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார். தற்போது மும்பை 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. உ.பி. வாரியர்ஸ் அணியும் 5-ல் 2-ல் வெற்றி பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

Tags:    

Similar News