கிரிக்கெட் (Cricket)

2024-ம் ஆண்டு போலவே இந்த ஆண்டும்.. ஐபிஎல் அட்டவணை வெளியாகும் தேதி குறித்து வெளியான தகவல்

Published On 2026-03-03 21:30 IST   |   Update On 2026-03-03 21:30:00 IST
  • 2024-ஆம் ஆண்டைப் போலவே இந்த முறையும் ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட உள்ளது.
  • சுமார் 15 முதல் 20 நாட்களுக்கான போட்டிகள் முதற்கட்டமாக அறிவிக்கப்படும்.

2026-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் கட்டப் போட்டிகளுக்கான அட்டவணையை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வரும் மார்ச் 6 அல்லது 7-ஆம் தேதிகளில் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, 2024-ஆம் ஆண்டைப் போலவே இந்த முறையும் ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட உள்ளது.

அதன்படி தொடக்கப் போட்டியில் இருந்து ஏப்ரல் மாதம் வரையிலான சுமார் 15 முதல் 20 நாட்களுக்கான போட்டிகள் முதற்கட்டமாக அறிவிக்கப்படும்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இரண்டாம் கட்ட மற்றும் இறுதிப்போட்டிக்கான முழுமையான அட்டவணை இறுதி செய்யப்படும்.

பாதுகாப்புப் பணிகளுக்காகப் பெருமளவிலான காவல்துறையினர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதால், அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதிகளில் போட்டிகள் நடத்துவதைத் தவிர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாகவே, முழு அட்டவணையை ஒரே நேரத்தில் வெளியிடாமல் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்காக பிசிசிஐ காத்திருக்கிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களின்படி, மார்ச் 28-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டி நடைபெற வாய்ப்புள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், டிக்கெட் விற்பனை மற்றும் அணிகளின் பயிற்சி முகாம்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News