விஜய் ஹசாரே டிராபி: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது விதர்பா
- முதலில் ஆடிய விதர்பா அணி 50 ஓவரில் 317 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய சவுராஷ்டிர அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பெங்களூரு:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தது.
லீக் சுற்று, காலிறுதி சுற்று மற்றும் அரையிறுதி சுற்றுகள் முடிவில் சவுராஷ்டிரா, விதர்பா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சவுராஷ்டிர அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய விதர்பா அணி 50 ஓவரில் 317 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் அதர்வா டைட் சதமடித்து 128 ரன்கள் குவித்தார். யாஷ் ரதோட் 54 ரன்னும், அமன் மோகடே 33 ரன்னும் எடுத்தனர்.
சவுராஷ்டிரா அணிச் ஆர்பில் அன்குர் பன்வார் 4 விக்கெட்டும், சிராக் ஜானி, சேடன் சகாரியா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சவுராஷ்டிரா அணி களமிறங்கியது. அந்த அணியின் மன்காட் 88 ரன்னும், சிராக் ஜானி 64 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், சவுராஷ்டிரா அணி 48.5 ஓவரில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற விதர்பா அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
விதர்பா சார்பில் யாஷ் தாக்குர் 4 விக்கெட்டும், நசிகேத் 3 விக்கெட்டும், தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது அதர்வா டைடுக்கும், தொடர் நாயகன் விருது அமன் மோகடேவுக்கும் அளிக்கப்பட்டது.