கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: மார்ஷ் தலைமையில் ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

Published On 2026-01-19 11:53 IST   |   Update On 2026-01-19 11:53:00 IST
  • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.
  • அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியில் சிறப்பு வாய்ந்ததாக பிக்பாஸ் தொடர் கருதபபடுகிறது. இந்த தொடர் தற்போது இறூதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு பயிற்சி போட்டியாக இந்த போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக மிட்செல் மார்ஷ் தொடர்கிறார்.

ஆஸ்திரேலிய டி20 அணி:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன், கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், ஜாக் எட்வர்ட்ஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னேமன், மிட்ச் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா

Tags:    

Similar News