null
ஒரு GOOD நியூஸ்.. ஒரு BAD நியூஸ்.. ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிவிப்பு
- அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
- அதற்கு முன்னதாக பாகிஸ்தானுடன் டி20 தொடரில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு பயிற்சி போட்டியாக இந்த தொடரில் இரு அணிகளும் மோதுகின்றனர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இடம் பெறவில்லை.
இந்நிலையில் முழுமையாக காயம் குணமடையாததால் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகி உள்ளார். அடுத்த 2-3 போட்டிகளில் அவர் அணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயத்தில் இருந்த அதிரடி பேட்டர் டிம் டேவிட் டி20 தொடரில் விளையாடுவதற்கு முழு உடல் தகுதியுடன் உள்ளார் எனவும் ஆஸ்திரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.