கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: வெளிநாட்டு ரசிகர்களை கடத்த பயங்கரவாதிகள் திட்டம்- பாக். உளவுத்துறை எச்சரிக்கை

Published On 2025-02-24 17:02 IST   |   Update On 2025-02-24 17:02:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபியில் 10,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் ஐ.சி.சி. தொடரை நடத்துகிறது. 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை அந்நாடு நடத்தியது. அதன் பிறகு பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அந்நாட்டில் ஐ.சி.சி. கிரிக்கெட் தொடர்கள் நடைபெறாமல் இருந்தது.

லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் உள்ள மைதானங்கள் மற்றும் கிரிக்கெட் அணியினர் தங்கும் ஓட்டல்களில் உயர் கமாண்டோ பிரிவுகள் உட்பட 10,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி, போட்டிக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பார்க்க வரும் வெளிநாட்டு ரசிகர்களை கடத்த ISKP என்ற பயங்கரவாத அமைப்பு திட்டம் போட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News