#SanjuSamson டி20 உலக கோப்பை: தொடர் நாயகனுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன்
- அரையிறுதியில் 89 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் சஞ்சு சாம்சன் 97* ரன்கள் அடித்தார்
டி20 உலகக் கோப்பை தொடரின் 2வது அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் 89 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதற்கு முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் சஞ்சு சாம்சன் 97* ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெறவைத்தார்.
நாளை அகமதாபாத்தில் உள்ள நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், ஐசிசி வழங்கும் 2026 டி20 உலக கோப்பையில் சிறந்த வீரருக்கான விருதின் பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ளார்.
மேலும் இந்த பட்டியலில், எய்டன் மார்க்ரம், லுங்கி இங்கிடி, டிம் செய்ஃபெர்ட், ரச்சின் ரவிந்திரா, |வில் ஜேக்ஸ், ஷாட்லி வான் ஷல்க்விக், ஃபர்ஹான் ஆகியோர் உள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் சஞ்சு சாம்சன் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.