null
இந்தியாவில் தவிப்பு: ரொனால்டோ கொஞ்சம் உங்களுடைய ஜெட்டை அனுப்புங்க..! வெஸ்ட் இண்டீஸ் வீரரின் பதிவு..!
- அமெரிக்கா- ஈரான் போரால் துபாய் விமான நிலையம் வழியாக செல்ல முடியாத நிலை.
- தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் அனுமதிக்காக காத்திருப்பு.
டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டி நாளை மறுதினம் குஜராத்தில் நடக்கிறது. இதில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்றி கடைசி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
அமெரிக்கா- ஈரான் இடையிலான சண்டையில் ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் துபாய் விமான நிலைய சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
இதனால் கடந்த 5 நாட்களாக சொந்த நாடு திரும்ப முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொல்கத்தாவில் தவித்து வருகிறார்கள். அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் சமி, சொந்த நாடு திரும்ப விரும்புகிறோம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைன் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உதவி கேட்டுள்ளார். இது தொடர்பாக ஹொசைன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் "இந்த கட்டத்தில், தங்களுடைய தனி விமானத்தை (ஜெட்) அனுப்பி வைக்குமாறு கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் கேட்பதுதான் நல்லது. ஆம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கால்பந்து வீரரான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கென்று தனி விமானம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி மற்றும் பிசிசிஐ சிறப்பு விமானத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. என்றாலும் வான்வழியை பயன்படுத்தி செல்ல அனுமதிக்காக காத்திருக்கின்றன.