கிரிக்கெட் (Cricket)

கேட்ச் மிஸ்... மேட்ச் மிஸ்... சஞ்சு சாம்சன் கேட்சை தவற விட்டது மிகப்பெரிய தவறு- ஹாரி புரூக்

Published On 2026-03-06 11:40 IST   |   Update On 2026-03-06 11:40:00 IST
  • சஞ்சு சாம்சன் அடித்த ஸ்கோரை (89 ரன்) நான் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
  • எங்கள் அணி வீரர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன் குவித்தது.

தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 42 பந்தில் 89 ரன்னும் ( 8 பவுண்டரி, 7 சிக்சர்) , ஷிவம் துபே 25 பந்தில் 43 ரன்னும் ( 1 பவுண்டரி, 4 சிக்சர்) , இஷான் கிஷன் 18 பந்தில் 39 ரன்னும் ( 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

254 ரன் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து கடும் சவால் கொடுத்து கடைசி வரை போராடியது. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்தது. இதனால் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.

தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் நிருபர்களிடம் கூறியதாவது:-

சஞ்ச சாம்சன் 15 ரன்னில் இருந்த போது அவரது கேட்சை தவற விட்டேன். இது மிகப்பெரிய தவறாகிவிட்டது. அவர் அடித்த ஸ்கோரை (89 ரன்) நான் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். கேட்ச்களை தவற விடுவது போட்டியை பாதிக்கும்.

இந்திய வீரர்கள் பீல்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். எங்கள் அணி வீரர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பெத்தெல் கடைசி வரை போராடினார். இந்த அரைஇறுதி ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News