கிரிக்கெட் (Cricket)
null

#INDvsENG டி20 உலகக் கோப்பை 2026: உலக சாதனையை சமன் செய்த இந்திய அணி

Published On 2026-03-06 09:32 IST   |   Update On 2026-03-06 09:32:00 IST
  • அரையிறுதி போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 253 ரன்கள் குவித்தது.
  • தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

மும்பை:

டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் விளையாடின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது.

அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். கடைசி வரை போராடிய அவர் 105 ரன்களில் (ரன் அவுட் ) ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்தியா தரப்பில் 19 சிக்சர் அடிக்கப்பட்டன. டி20 உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் சாதனையை இந்தியா சமன் செய்தது. ஏற்கனவே நெதர்லாந்து (2014-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக), வெஸ்ட் இண்டீஸ் (நடப்பு உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக) அணிகள் தலா 19 சிக்சர் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News