கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதல்
- இங்கிலாந்து அணி 20 ஓவரில் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடரின் 2வது அரையிறுதி மும்பையில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 253 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்தார்.
அடுத்து, களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.