ரோகித் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் அணியில் நீடித்திருக்க மாட்டார்- இர்பான் பதான்
- ரோகித் கடந்த 15 இன்னிங்ஸ்கள் முறையே 6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10, 3, 9 என வெளியேறினார்.
- 15 போட்டிகளில் மொத்தமாக 164 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. அவர் கடந்த 15 இன்னிங்ஸ்கள் முறையே 6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10, 3, 9 என வெளியேறினார். மொத்தமாக 164 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். சராசரி 10.93 ஆகும். பார்டர் கவாஸ்கர் டிராபில் ரோகித் சர்மாவின் அதிகபட்ச ரன்கள் 10 ரன்கள் ஆகும்.
இந்நிலையில் ரோகித் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் டெஸ்ட் அணியில் நீடித்திருக்க மாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா தற்போது ரன்களை எடுப்பதில் தொடர்ந்து சிரமப்படுகிறார் என்ற யதார்த்ததை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் இந்திய அணியில் நீடித்திருக்கவே மாட்டார்.
இவ்வாறு இர்பான் கூறினார்.