கிரிக்கெட் (Cricket)

டாம் லாதம், கான்வே அபார சதம்: முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 334/1

Published On 2025-12-19 00:06 IST   |   Update On 2025-12-19 00:06:00 IST
  • டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
  • முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் நாளில் 334 ரன்கள் குவித்தது.

மவுண்ட் மவுங்கானுய்:

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற 2 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 1-0 (முதல் போட்டி டிரா) என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டேவான் கான்வே களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே நிதானமாக ஆடியது இந்த ஜோடி. இதனால் இந்த ஜோடியைப் பிரிக்க வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இருவரும் சதமடித்து அசத்தினர்.

முதல் விக்கெட்டுக்கு 323 ரன்கள் குவித்த நிலையில் கேப்டன் டாம் லாதம் 137 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜேக்கப் டபி களமிறங்கினார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 90 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்துள்ளது. டேவான் கான்வே 178 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

Tags:    

Similar News