கிரிக்கெட் (Cricket)
ஜூனியர் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்
- முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவரில் 225 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை அணி 186 ரன்னில் சுருண்டது.
துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
'பி' பிரி–வில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்கதேச அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி 46.3 ஓவரில் 225 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 49.1 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்களதேசம் 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 விக்கெட் வீழ்த்திய வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் இக்பால் ஹூசைன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை நடைபெறும் முதலாவது அரை இறுதியில் இந்தியா- இலங்கை மோதுகின்றன. மற்றொரு அரை இறுதியில் வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன.